அல்லாஹ்வின் தூதர் அவர்களுடைய அழுகை

 



அல்லாஹ்வின் தூதர் அவர்களுடைய அழுகை


முதலாவது ஹதீஸ்: (அல்லாஹ்வின்) தூதர் அவர்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊது அவர்களுடன் உட்கார்ந்திருந்தனர்.


தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: எனக்காக ஓதுவீராக!


இப்னு மஸ்ஊது ரளியல்லாஹு அன்ஹு: உங்கள் மீது (வேதம்) இறக்கப்பட்டிருக்க, உங்களுக்காக நான் ஓதுவதா?


தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: அதை என் அல்லாத வரிடமிருந்து நான் செவியேற்க விரும்புகிறேன். அப்துல்லாஹ் பின் மஸ்ஊது அந்நிஸா அத்தியாயத்திலிருந்து "(நபியே!) ஒவ்வொரு சமுதாயத்திலிருந்து. ஒரு சாட்சியை நாம் கொண்டுவரும்போது இவர்களுக்கு (விரோதமான) சாட்சியாக உம்மை நாம் கொண்டும் வந்தால், நிராகரித்த இவர்களுடைய நிலைமை எவ்வாறிருக்கும்?" என்ற இவ்வசனத்தை அவர் வந்தடையும் வரை ஓதினார். அந்நிஸா அத்தியாயம் வசனம் 41


தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: "இப்போது உமக்குப் போதும்.


இப்னு மஸ்ஊது அல்லாஹ்வின் தூதர் அவர்களின்பால் திரும்பிப் பார்க்கிறார்கள் அதுசமயம் அவர்களுடைய இரு கண்கள் நீரை வடிக்கின்றன.


புகாரீ மற்றும் முஸ்லிம் பதிவு செய்த ஹதீஸாகும்.


ஹதீஸிலிருந்து பெறப்படும் கருத்துக்கள் :


1. குர்ஆனை செவியேற்குமிடத்து பணிவென்பது அழுகையால் இருக்கலாம். (ஓலமிட்டுக்) கத்துவதால் அல்ல.


2. ஓதியவருக்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "இப்போது உமக்குப் போதும்" எனக் கூறினார்கள். ஸதகல்லாஹுல் அழீம் என்று அவர்கள் கூறவே இல்லை.


3. அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன்னல்லாதவரிடமிருந்து குர்ஆனைக் கேட்பதை விரும்புவர்களாக இருந்தனர்.


இரண்டாவது ஹதீஸ்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் அவர்களுடைய மகனார் இப்ராஹீமிடம் நபித்தோழர்கள் நுழைகிறார்கள். அவரோ, அவருக்குப் பாலூட்டுபவரிடம் இருக்கிறார்; அந்நிலையில் அவரை (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் (வாங்கி) எடுத்து அவரை முத்தமும் இட்டு முகர்ந்து கொள்ளவும் செய்கிறார்கள். பின்னர். நபித்தோழர்கள் அதற்குப்பிறகு (ஒருசமயம்) அவர்களிடம் நுழைகிறார்கள் அப்போது இப்ராஹீமை இறப்பெய்திவிட காணப் பெறுகிறார்கள்: (அந்நிலையில்) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இருகண்களும் நீரைக் கொட்டத் தொடங்கின (அதைக் கண்டுவிட்ட) அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப்: அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நீங்களுமா (அழுகிறீர்கள்)?


அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: "நிச்சயமாக அது அருளாகும் நிச்சயமாக கண்நீரை வடிக்கின்றது. இதயமோ கவலை அடைகின்றது. நம்முடைய இரட்சகனுக்குப் பொருத்த மானதையல்லாது நாம் கூறவும் மாட்டோம்: நிச்சயமாக நாங்கள், இப்ராஹீமே! உன் பிரிவால் கவலையும் அடைந்தவர்கள்"  இதனை புகாரீ மற்றும் முஸ்லிம் பதிவு செய்துள்ளனர்.


ஹதீஸிலிருந்து பெறப்படும் கருத்துகள் :


1. சப்தம் மற்றும் ஒப்பாரியின்றி மய்யித்திற்காக அழுவது (மார்க்கத்தில்) அனுமதியுடையதாகும்.


2. (அல்லாஹ்வின்) நிர்ணயத் (தால் -விதியால் ஏற்பட்டு விட்டதை பொருந்திக் கொண்டு, கோபத்தைத் தெரிவிக்குமே அவ்வாறான பேச்சுக்களைத் தவிர்ப்பதோடு, மையித்திற்காக கவலை அடைவது அனுமதியுடையதாகும்.

Comments